உள்ளூர் செய்திகள்

சிவகங்கை கலெக்டரின் உதவியாளரிடம் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்த பீகார் வாலிபர்

Published On 2022-07-02 16:37 IST   |   Update On 2022-07-02 16:37:00 IST
  • கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கலெக்டர் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இதுகுறித்து சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை நேரடி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா. இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து லிங்க் மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்ப கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை உண்மை என நம்பிய சர்மிளா ரூ.10 ஆயிரத்தை அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார். இதேபோல் அடிக்கடி குறுஞ்செய்தி வரவே 30 தவணைகளில் ரூ.10 ஆயிரம் என ரூ.3 லட்சத்தை அனுப்பினார். இது குறித்து சந்தேகம் அடைந்த சர்மிளா கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது அது போலியான கணக்கு என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த போலி செல்போன் கணக்கு பீகார் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருவது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கலெக்டர் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News