உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கைதுக்கு எதிர்ப்பு: கோவையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

Published On 2022-10-19 09:19 GMT   |   Update On 2022-10-19 09:19 GMT
  • அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
  • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோவை:

சென்னையில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்தனர்.

அவர்கள் திடீரென ஊர்வலமாக சென்று அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 10 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News