உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி வாலிபர் கொலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2023-10-13 06:30 GMT   |   Update On 2023-10-13 06:30 GMT
  • வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
  • வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள்.

பொன்னேரி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது28). பெண் தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு யுவராஜ் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன், தங்கராஜ், ராமச்சந்திரன், ராம மூர்த்தி, ஸ்ரீராமலு, சண்முகம், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இறந்து போன முருகன், சண்முகம் ஆகியோரை தவிர்த்து தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமலு, மணி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு சார்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.ஆர் லாசர் ஆஜரானார்.

Tags:    

Similar News