உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் சூதாட்டம்: 3 வாலிபர்கள் கைது

Published On 2022-06-13 13:56 IST   |   Update On 2022-06-13 13:57:00 IST
  • அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சீட்டுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, பஸ் நிலையம், பஜார் வீதி போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையம் அருகே சென்றபோது 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த அன்சாரி, திருவள்ளூர் எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்த கதிரவன், அகமது பாஷா என்று தெரியவந்தது.அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சீட்டுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1980 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News