உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் பகுதியில் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர் சேதம்- விவசாயிகள் வேதனை

Published On 2022-09-05 13:20 IST   |   Update On 2022-09-05 13:20:00 IST
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது.
  • நிலத்தில் ஈரப்பதம் இருப்பதனால், எந்திரத்தால் அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது.

திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கடம்பாடி, படடிக்காடி, அச்சரபாக்கம், நெய்குப்பி, கொல்லமேடு, பொன்விளைந்த களத்தூர், வடகடம்பாடி பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. மூழ்கிய நெற்பயிரில் முளைப்பு விடவும் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் நிலத்தில் ஈரப்பதம் இருப்பதனால், எந்திரத்தால் அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த நெற்பயிர்களை அறுக்க முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Similar News