உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Published On 2023-02-18 14:17 IST   |   Update On 2023-02-18 14:17:00 IST
  • டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • புதிய நிர்வாகிகள் தேர்வு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மரகதலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில தலைவர் சரவணனுடைய பணிநீக்கத்தை ரத்து செய்து பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் ஒன்றிணைப்பு மாநில அமைப்பு செயலாளர் சுவாமிநாதன் பேசினார்.தொடர்ந்து வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவராக அந்தோனியும், மாவட்ட செயல் தலைவராக முருகனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் நமசிவாயம், பூரணம், சுந்தர்ராஜ், நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News