உள்ளூர் செய்திகள்

ஊட்டி மார்லி மந்து அணை பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள்

Published On 2022-06-24 09:34 GMT   |   Update On 2022-06-24 09:34 GMT
  • ஊட்டி ஹில் மௌண்ட் பகுதியில் 2 பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.
  • வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன்கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் மார்லி மந்து ஏரி பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர்கள் மார்லி மந்துஅணை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட்டனர்

அதனைத் தொடர்ந்து ஊட்டி ரோஸ் மௌண்ட் அருகில் ஹில் மௌண்ட் பகுதியில் நேற்று இரண்டு பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.

அதனை கண்டறியும் விதமாக ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர் ரமேஷ் தலைமையில் இன்று 02 கண்காணிப்பு கேமராக்களை அந்தப் பகுதியில் பொருத்தினர்...

மேலும் வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது .வனவிலங்குகள் அந்த பகுதியில் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டரியவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் தெரிவிக்கையில் மார்லி மந்து பகுதியில் தினமும் கண்காணிப்பு பணியில் வனத்துறை ஈடுபட்டு வருவதாகவும் கால்நடைகளை அணைப்பகுதியில் மேய்க்க வேண்டாம் என கேட்டு கொண்டார்

Tags:    

Similar News