உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்

Published On 2023-07-13 13:26 IST   |   Update On 2023-07-13 13:26:00 IST
  • யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
  • இதில் தி.மு.க உறுப்பினர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ், கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் ஊராட்சியில் ஒரு ஏக்கருக்கு 100 சதவீதம் உரம் மானியமாக, யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் தொகு ப்புகளை, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், வேளாண்மை துறை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, உதவி இயக்குநர் தேவிகலாவதி, வேளாண் அலுவலர் தேன்மொழி, துணை அலுவலர் சாரதி, கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், ஊராட்சி தலைவர் வைஜெயந்தி சிலம்பரசன், ஒன்றிய குழு உறுப்பினர் தங்க.தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜன், பகுதி செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி துணை தலைவர் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News