உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் செய்த பா.ம.க.வினர்களை படத்தில் காணலாம். 

விருத்தாசலம் அருகே ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல்

Published On 2022-11-25 14:05 IST   |   Update On 2022-11-25 14:05:00 IST
  • பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியிலிருந்து இன்று காலை டவுன் பஸ் பொதுமக்களை ஏற்றி கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த கூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது வயலூர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்ைச அனுப்பி வைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த 5க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்த பா.ம. க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள்சாலையில் அமர்ந்து மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசம்செய்தனர்.

Tags:    

Similar News