உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவர் தீபக் தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-11 07:56 GMT   |   Update On 2022-09-11 07:56 GMT
  • பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், மழைநீரை சேமித்து வைக்கவும் வலியுறுத்தினர்.
  • மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பண்டாரவாடை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுல்தானாபர்வீன் தலைமை வகித்தார்.

பள்ளி நிர்வாகக்குழு தலைவர் ஜபரூல்லா, செயலாளரும் தாளாளருமான முஹமதுபா ட்சா, பள்ளி முதல்வர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் தீபக் கலந்து கொண்டு தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தியும், மழைநீரை சேமித்து வைக்கவும், மரங்களை நடவு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணி பள்ளி அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் பள்ளியை வந்தடைந்தது.

இதில் பள்ளியின் நிர்வாக அலுவலர் கரிகாலன், நிர்வாககுழு உறுப்பினர் முகமது பாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News