உள்ளூர் செய்திகள்
துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி மாணவன் பலி
- வீட்டில் ஈர துணியை கம்பியில் காய வைத்துள்ளார்.
- மின்சாரம் தாக்கியதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அரசகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் ஈர துணியை கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.