உள்ளூர் செய்திகள்
சங்கராபுரத்தில் மாணவர்கள் கோஷ்டி மோதல்
- சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.
- மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் ஆலத்தூரை சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். சங்கராபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த சங்கராபுரம் மாணவரின் பையை, ஆலத்தூர் மாணவர் பிடுங்கியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த சங்கராபுரம் மாணவரை, ஆலத்தூர் மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மாணவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலத்தூர் மாணவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.