உள்ளூர் செய்திகள்

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2025-02-26 10:24 IST   |   Update On 2025-02-26 10:24:00 IST
  • 700-க்கும் மேற்பட்ட விசை படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
  • வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற 42 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மேலும் 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் ராமேசுவரம் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

42 மீனவர்களை விடு தலை செய்ய வலியுறுத்தி கடந்24-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் 700-க்கும் மேற்பட்ட விசை படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளன.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களாக வேலை நிறுத்தம் தொடர்வதால் ராமேசு வரத்தில் இதுவரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன் வர்த்தம் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கைதான மீனவர்களை விடுதலை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு களை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கால வரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீனவர்களை விடு விக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மீனவ சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

Similar News