உள்ளூர் செய்திகள்

கடலூர் லாரன்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூரில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை

Published On 2022-06-11 16:10 IST   |   Update On 2022-06-11 16:10:00 IST
  • கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக திருப்பாதிரி ப்புலியூர் லாரன்ஸ் சாலை இருந்து வருகின்றது.

கடலூர்:

கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக திருப்பாதிரி ப்புலியூர் லாரன்ஸ் சாலை இருந்து வருகின்றது. இங்கு பஸ் நிலையம், பூ மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடை, நகைக்கடை, பிரசித்தி பெற்ற கோவில்கள், ரயில் நிலையம் போன்றவற்றை இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் இச்சாலையில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் லாரன்ஸ் சாலையில் அதிக அளவில் கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக அதிகளவில் சென்று வருவதாலும், பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களுக்கு செல்லும் பொதுமக்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை வரிசையில் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்திக் செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து போலீசார் சார்பில் லாரன்ஸ் அப்பகுதியில் தற்போது ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது‌. இதன்மூலம் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் லாரன்ஸ் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து வாகன ஓட்டிகளும் போலீசார் அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய வாகனத்தை நிறுத்தி விட்டு செல்ல வேண்டும். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொது மக்கள் பாதிக்காத வகையில் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News