உள்ளூர் செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை

Published On 2022-07-02 10:16 GMT   |   Update On 2022-07-02 10:16 GMT
  • கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலை பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பரவி வருகிறது.
  • 4-வது அலையை எதிர் கொள்ள, தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடி க்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

கோவை:

தமிழக சட்டமன்ற அ.தி.மு.க கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலை பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

கொரோனா 3-வது அலை முடிவடைந்து ஓரளவு இழப்புகளில் இருந்து மீண்டு, பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருகிற சூழ்நிலையில், இப்போது கொரோனா 4-வது அலை பரவி பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்குகிறது.

இந்த பெருந்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். தற்போது பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலையை எதிர் கொள்ள, தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடி க்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

கோவை மாவட்டத்தின் எல்லையான அண்டை மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில், சோதனைச்சாவடிகள் மற்றும் விமான நிலையம், ெரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப் பட்டோரை தனிமைப்படுத்த வேண்டும். துரிதமாக செயல்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News