உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் வருகை பதிவேடு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரசு மருத்துவமனையில் அதி நவீன கருவி

Published On 2023-02-14 14:57 IST   |   Update On 2023-02-14 14:57:00 IST
  • காசநோய் கண்டறியும் கருவியை கலெக்டர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.
  • மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அதி நவீன முறையில் காசநோய் கண்டறியும் கருவியை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன முறையில் காசநோய் கண்டறியும் கருவி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் சளி பரிசோதனை செய்து 2 மணி நேரத்தில் சளியின் பரிசோதனை ஆய்வு முடிவை அறியலாம்.

இக்கருவியின் மூலம் பல்வகை கூட்டு மருந்து சிகிச்சை காசநோயை கண்டறியலாம்.

இக்கருவியில் நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளி பரிசோதனை செய்து ஆய்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

காசநோய் கண்டறியப்பட்டால் முற்றிலும் இலவசமாக சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்ப டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து உள் நோயளிகள் மற்றும் வெளி நோயாளிகள் வருகை பதிவேடு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி டீன் ராஜஸ்ரீ, கா சநோய் பிரிவு துணை இயக்குனர் (பொறுப்பு) சுகந்தா, டாக்டர்கள் செல்வி, ஸ்ரீதர், அருண், கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News