உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள்.

மாநில அளவிலான எறிபந்து போட்டி- கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை

Published On 2022-10-31 09:14 GMT   |   Update On 2022-10-31 09:14 GMT
  • போட்டியில் கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடம் பிடித்தனர்.
  • வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் பாராட்டினார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடமும், இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற 2 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News