உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாநாட்டை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருதுதுரை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், மாநில அளவிலான மருத்துவ மாநாடு

Published On 2022-10-05 15:38 IST   |   Update On 2022-10-05 15:38:00 IST
  • பேரிடர் மேலாண்மை மற்றும் மருத்துவமனைகள் அதை எதிர்கொள்ள தயாராகுதல் பற்றிய மாநாடு.
  • விழாவில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை மற்றும் மீனாட்சி மருத்து வமனை இணைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் மருத்துவமனைகள் அதை எதிர்கொள்ள தயாராகுதல் பற்றிய மாநில அளவிலான மருத்துவ மாநாடு நடைபெற்றது.

மாநாட்டை தஞ்சை மருத்துவ கல்லூரிமுதல்வர் மருதுதுரை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ கண்கா ணிப்பாளர் மத்தியஸ் ஆர்தர் மற்றும் மருத்துவக்கல்லூரி உரைநிலைய மருத்துவர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

இதில் மருத்துவ பேராசிரியர்கள் பேரிடர் மேலாண்மை பற்றி உரையாற்றினர்.

விழா ஏற்பாடுகளை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல் மற்றும் மருத்துவக்கல்லூரி அவசர பிரிவு தலைவர் (பொ) வினோத் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News