உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை

Published On 2022-08-15 09:49 GMT   |   Update On 2022-08-15 09:49 GMT
  • மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது.
  • 35 பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது.

இதில், சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கிருஷ்ண கிரி, கன்னியாகுமரி, சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 620 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர் முனிராசு தலைமையில், 35 வீரர்கள், 5 வீராங்கனைகள் கலந்து கொண்டு, 14 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட குத்துச்சண்டை சங்கத் தலைவர் ஏகம்ப வாணன், துணைத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் தீபக் ஆகியோர் பாராட்டி னர்.

Tags:    

Similar News