துளிர் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்.
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி-வினா போட்டி நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி நடைபெற்றது.
அறிவியல் இயக்க கொரடாச்சேரி கிளையின் தலைவர் ச.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ப.குமார் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்–களாக வட்டாரக்கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் யு.எஸ். பொன்முடி, மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே சரவணராஜன், மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.முடிவில் பொருளாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார். கொரடாச்சேரி ஒன்றிய அளவில் துளிர் வினாடி வினா போட்டியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு பிரிவில் அபிவிருத்திஸ்வரம் நடுநிலைப் பள்ளி முதலிடமும்.
மேலராதா நல்லூர் நடுநிலைப் பள்ளி இரண்டாமிடமும், திருவிடவாசல் நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் கண்கொடுத்தவனிதம் உயர்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றுள்ளன.