உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா அருள்பாலித்த காட்சி.

வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-12-16 07:06 GMT   |   Update On 2022-12-16 07:06 GMT
  • வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கன் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பரமத்திவேலுார்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கன் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதில் பக்தர்களே, அவர்கள் கொண்டு வந்த பசும்பாலால் சாய் பாபாவிற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் முழு கொப்பரை தேங்காயை பக்தர்கள் கொண்டு வந்து யாக தீயில் போட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் நாமக்கல், பரமத்தி, பரமத்திவேலுார், பொத்தனூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு, ஜேடர்பாளையம், வெங்கரை, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News