உள்ளூர் செய்திகள்

கிராமசபைக் கூட்டம் நடந்தது.

முத்துப்பேட்டை அருகே சிறப்பு கிராமசபைக் கூட்டம்

Published On 2023-03-23 09:37 GMT   |   Update On 2023-03-23 09:37 GMT
  • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
  • குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்து இன்றியமையாத தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொண்டார்.

முன்னதாக செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

இதில் ஊராட்சி துறை சார்பில், பணி மேற்பார்வையாளர் அமுதா கலந்து கொண்டு, குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், நீரினால் பரவும் நோய்கள் பற்றியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.

சுகாதார ஆய்வாளர் பாலசண்முகம், கிராம சுகாதார செவிலியர் கலைமணி ஆகியோர் சுகாதாரத் துறை அன்றாடம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறுதான்யம் பயன்படுத்த வேண்டும் என்று தலைப்பிட்டு பேசினார்.

துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

Tags:    

Similar News