உள்ளூர் செய்திகள்

நாகூர் தர்கா கந்தூரி விழாவை யொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்

Published On 2023-11-27 09:29 GMT   |   Update On 2023-11-27 09:29 GMT
  • பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
  • நாகூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி புனித கொடி ஏற்றத்துடன் தொடங்கி

27. 12. 2023 தேதி புதன்கிழமை புனித கொடி இறக்கத்துடன் நிறைவடைய உள்ளது.

இதில் முக்கிய நிகழ்வாக 23-ம் தேதி சனிக்கிழமை இரவு புனித சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 24 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரவுலாவஷரீபில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆகவே ரெயில் மூலம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் நாகூர், திருச்சி, சென்னை, பெங்களூர், கொல்லம், ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கவும், காரைக்கால் - சென்னை, காரைக்கால் - எர்ணாகுளம், மன்னார்குடி - சென்னை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும், நாகூர் வழியாக பெங்களூரு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களும் கூடுதலாக பெட்டி இணைக்க வேண்டும்.

மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அதிக அளவில்கழிவறை வசதி குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் நாகூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News