கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் ேநர்முக உதவியாளர் கோடியப்பன், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா உள்பட பலர் உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் தொடக்கம்
- 660 மாணவ, மாணவிகளை, அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள்.
- மாணவர்கள் விளையாட்டு, கலை மற்றும் கைவினை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது. இந்த கோடைகால தொடக்க முகாமில் குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம் மற்றும் மாதிரி அகழ்வாராய்ச்சி, தொழில்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு மற்றும் பல வகையான செயல்பாடுகள் வழங்கப்படும்.
இந்த முகாமில் 8 மற்றும் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் சில தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி இன்று (சனிக்கிழமை) கல்லுகுறிக்கியில் பாறை ஓவியங்கள் காணவும், நாளை (திங்கட்கிழமை) மலர்கள் சாகுபடி குறித்து அறிந்து கொள்ள, தளியில் கொய்மலர்கள் ஆராய்ச்சி மையத்திற்கும், 17-ந் தேதி ஓசூரில் உள்ள டைட்டான், அசோக் லே லேண்ட் நிறுவனங்களுக்கும், 18&ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 19-ந் தேதி பெங்களூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கும், குப்பத்தில் உள்ள அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனுக்கு மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
மேலும், வருகிற 22-ந் தேதி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திகிரி கால்நடை பண்ணைக்கும், 24-ந் தேதி அய்யூர் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு மாணவர்கள் செல்கின்றனர். வருகிற 25-ந் தேதி கலெக்டருடன் நடைபெறும் தேநீர் விருந்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த கோடைக்கால சிறப்பு முகாமில் பங்கேற்கும் 660 மாணவ, மாணவிகளை, அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில், மாணவர்கள் விளையாட்டு, கலை மற்றும் கைவினை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கியமான தலைப்புகளை மையமாகக் கொண்ட கல்வி பட்டறைகளிலும் பங்கேற்க முடியும். இது, மாணவர்களுக்கு நேர்மறையான மற்றும் ஈர்க்கக்கூடிய கற்றல் அனுபவம் கிடைக்கும், திறன்கள் மேம்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.