உள்ளூர் செய்திகள்
காவேரிபட்டணத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
- பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்.
- அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஸ்ரீ ராம பக்த வீர ஆஞ்சநேயர் கோவிலில் வாராகி அம்மனுக்கு ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு 136 கலச பூஜைகளும், 136 மகாயாக வேள்விகளும், உலக நன்மை வேண்டியும் குடும்ப நலனுக்காகவும் பெண்கள் பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மகா வாராஹி அம்மனுக்கு மகா அபிஷேகமும் சர்வ அலங்காரத்துடன் மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர்.
அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் இந்த விசேஷ பூஜைகளை ஸ்ரீ ராம பக்த வீர ஆஞ்சநேயர் பக்தர்கள் சபா குழுவினர் ஏற்பாடு செய்தனர்.