உள்ளூர் செய்திகள்

ஆடி கடைசி வெள்ளியை யொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2023-08-12 15:51 IST   |   Update On 2023-08-12 15:51:00 IST
  • அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தருமபுரி,  

தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதில் இலக்கியம்பட்டி புத்து நாகர்கோயில், சாலை மாரியம்மன் கோவில், செந்தில் நகரில் உள்ள அம்மன் கோவில், குமார சாமிப்பேட்டையில் உள்ள துர்க்கை அம்மன், உள்ளிட்ட கோவில்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்க ளுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதேபோல் தருமபுரி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் ரேணுகாம்பாள் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதை யொட்டி கோவில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப் பேட்டை உழவு தெரு மகா மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதி புரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோண்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆடி மாத 4-வது வெள்ளிக் கிமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News