உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவதை படத்தில் காணலாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலூரில் இரவு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-12-25 07:19 GMT   |   Update On 2022-12-25 07:19 GMT
  • நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது.
  • மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர்:

ஏசு கிறிஸ்து டிசம்பர் 25-ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன்படி நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் இரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை பங்கு தந்தை வைத்து, திருப்பலி நடத்தினார்.

இதேபோல் கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், குறிஞ்சிநகர் குழந்தை ஏசு ஆலயம், முதுநகர் பெந்தேகொஸ்தே சபை, மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயம் போன்ற பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடலூர் ஏ.எல்.சி. தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரா ர்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழாவையொட்டி கடலூரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

Tags:    

Similar News