உள்ளூர் செய்திகள்
சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
- நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது.
- சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் நேரடியாக சாய்பாபாவுக்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.