கோவை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தொழிற்கடன் முகாம்
- தமிழகம் முழுவதும் 2.77 கோடி மதிப்பில் தொழில் நிறுவனத்துக்கு கடன் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கபட்டுள்ளது.
- கோயம்புத்தூர் டி.ஐ.ஐ.எஸ் கிளை கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ தேவைகளை பூர்த்தி செய்கிறது.
கோவை,
மாவட்ட தொழில் துறைக்கு சிறப்பு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, கொடிசியா, கொசிமா போன்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசி யதாவது:-
தமிழகம் முழுவதும் 2.77 கோடி மதிப்பில் தொழில் நிறுவனத்துக்கு கடன் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கபட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு வழங்க கூடிய வங்கி கடன் எப்படி விண்ணப்பிப்பது என்றும், அதற்கு உண்டான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மைக்ரோ, எம்.எஸ்.எம்.இ போன்ற தொழிலுக்கு ரு.10 லட்சம் வரை பெறக்கூடிய நிறுவனங்களுக்கு எந்த விதமான செக்யூரிட்டி பத்திரமும் வாங்க கூடாது எனவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.
1949-ம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள எம்.எஸ்.எம்.இ தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் முன்னோடி அரசாங்க நிதி நிறுவனமாகும்.
கோயம்புத்தூர் டி.ஐ.ஐ.எஸ் கிளை கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ தேவைகளை பூர்த்தி செய்கிறது. டிஐ ஐ எஸ் ஆனது பல்வேறு திட்டங்களின் கீழ் கால கடன்கள், செயல்பாட்டு மூலதன கால கடன்களை வழங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏஏபிசிஎஸ் ஆனது கடந்த 21-ந் தேதி முதல் வருகிற 1-ந் தேதி வரை சிறப்பு தொழிற்கடன் முகாம் நடத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.