உள்ளூர் செய்திகள்

பிரதோஷத்தையொட்டி வாணீஸ்வரி கோவிலில் நந்திக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்ற காட்சி.

அரூரில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

Published On 2023-08-29 15:45 IST   |   Update On 2023-08-29 15:45:00 IST
  • அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள வர்ணீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் கடைவீதியில் வாணீஸ்வரி ஸ்ரீவாணீஸ்வரர் கோவில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள், உள்ளிட்டவற்றை கொண்டு அர்ச்சனைகளும் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை வாணீஸ்வரர் வழிப்பாடு சங்க உறுப்பினர்கள், தர்ம கர்த்தா முடிமன்னன், அர்ச்ச கர்கள் நாகராஜ், ரகு ஆகி யோர் செய்திருந்தனர். இதே போல் அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள வர்ணீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

Similar News