உள்ளூர் செய்திகள்

வண்ணார்்பேட்டை ரவுண்டாவில் பலத்த காற்று காரணமாக சாலையில் சரிந்து கிடக்கும் இரும்பு பேரிகாடுகள்

நெல்லை,தென்காசியில் தென்மேற்கு பருவக்காற்று வேகம் அதிகரிப்பு

Published On 2022-07-01 15:01 IST   |   Update On 2022-07-01 15:01:00 IST
  • தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது.
  • நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

நெல்லை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் புழுதி அதிக அளவில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக நெல்லை, தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருவதால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர்.

நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேரிகார்டுகள் காற்றின் வேகம் காரணமாக அடிக்கடி சாலையில் சாய்ந்து விழுந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது.

Tags:    

Similar News