மேட்டுப்பாளையத்தில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
- பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம்
இந்திய நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 4 கோட்டங்களிலும் தலா 15 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் குறித்து அதிகாரிகள் இடையே அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல். பயணிகளின் தேவைகள், புட் ப்ளாசா, ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல், ரயில் பயணிகள் தங்கும் ,அறை,வாகன பார்க்கிங் மேம்படுத்துதல் உள்ளிட்ட வை குறித்து அதிகாரிகளுடன் சென்று ரயில் நிலைய ரயில் நடை மேடை,நடைமேடை கூரை,கேன்டீன்,டிக்கெட் கொடுக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, உதவி கோட்ட மேலாளர் சிவலிங்கம்,முதன்மை வணிக மேலாளர் பூபதி ராஜா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர்,நிருபர்களை சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அதில் மேட்டுப்பாளையம், குன்னூர்,ஊட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அடங்கும்.
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பயணிகளின் தேவைகள்,வாகன பார்க்கிங், டிக்கெட் கொடுக்கும் இடம்,பயணிகள் தங்கும் அறை, ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தோம் என தெரிவித்தார்.
மேலும்,மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஹில்கு ரோவ் ரயில் நிலையத்தை தவிர்த்து மேலும் ஒரு ரயில் நிலையத்தை தேர்ந்தெடுத்து அங்கு கேண்டீன் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.