உள்ளூர் செய்திகள்

மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது

Published On 2022-09-16 15:14 IST   |   Update On 2022-09-16 15:14:00 IST
  • வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
  • மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 65). கோவில்அர்ச்சகர். இவர் நேற்றிரவு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவாசகத்தின் மகள் தமிழ்மாலா, மருமகன் சுசீந்தரன் இருவரும் வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென நடந்து சென்று கொண்டிருந்த மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிவாசகத்தை அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குபதிவு செய்து சுசீந்தரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News