உள்ளூர் செய்திகள்

திருவெண்ைணநல்லூர் அருகே தந்தை சொத்து கொடுக்காததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-10-03 13:52 IST   |   Update On 2022-10-03 13:52:00 IST
  • மனைவி வீட்டிற்கு வந்து விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார்.
  • இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆம்பூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 33) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருநாவலூர் அருகே சிவா பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளனர். மேலும் அய்யனார் சிவா பட்டினத்தில் மனைவி வீட்டில் உள்ளார். இந்நிலையில் அய்யனார் ஆமூர்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று அய்யனாரின் தந்தையான சங்கரிடம் சொத்தைப் பிரித்து தருமாறு அய்யனார் கேட்டுள்ளார். அதற்கு சங்கர் சொத்தை தர மறுத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்த அய்யனார் சிவா பட்டினத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்து விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார். பூச்சி மருந்து குடித்தும் வெகு நேரமாகியும் ஒன்றும் செய்யவில்லையாம் இதனால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News