உள்ளூர் செய்திகள்

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நூல்களை வழங்கினார்.

ரூ.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-22 07:49 GMT   |   Update On 2023-08-22 07:49 GMT
  • சிவகங்கையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர் கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவி, 3 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 44 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 25 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 22 ஆயிரத்து 860 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள், அறிவுசார் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நூல்கள், 1 மாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்று என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 64 ஆயிரத்து 800 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News