உள்ளூர் செய்திகள்

நீர் நிலைகள், கரைப்பகுதி சுத்தம் செய்யும் பணி

Published On 2022-07-25 07:13 GMT   |   Update On 2022-07-25 07:13 GMT
  • சிங்கம்புணரி பேரூராட்சி சார்பில் நீர் நிலைகள், கரைப்பகுதி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
  • சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் பணி நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கியது.

சிவகங்கை மாவட்ட கலெக்டரின் அறிவுரைக்கு ஏற்ப சிங்கம்புணரி வண்ணான் குண்டு, வெட்டியான் குண்டு பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தலைமை தாங்கினார். துணை சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நீர்நிலை பகுதிகளை கரையோரங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு மரங்கள் நடப்பட்டன. அதை தொடர்ந்து சிங்கம்புணரி சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

இதில் கவுன்சிலர்கள் திருமாறன், அப்துல்லா, ஷாஜகான், ஜெயக்குமார், மணி சேகரன் மற்றும் பொதுமக்களும், பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்களும் சேவுக அரிமா சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர். செயல் அலுவலர் ஜான் முகமது நன்றி கூறினார்.

Tags:    

Similar News