உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாண கோலத்தில் திருத்தளிநாதர்-சிவகாமி அம்பாள்.

திருத்தளிநாதர் கோவில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2023-05-29 07:54 GMT   |   Update On 2023-05-29 07:54 GMT
  • திருத்தளிநாதர் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
  • தென்மாபட்டு சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி பெருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்பாள் அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை போன்ற பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வெள்ளி கடகத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

5-ம் நாள் திருவிழாவில் திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாமி சுந்தரி அம்பா ளுக்கும் திருமண உற்சவம் நடைபெற்றது. சுவாமி சார்பில் சிவாச்சாரியார்கள் அம்பாளுக்கு திருமா ங்கல்யம் அணிவித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமணமான பெண்கள் புது தாலி மாற்றிக்கொண்டனர்.

இதில் குன்றக்குடி தம்பிரான் சுவாமிகள், தலைவர் நாகராஜன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல் முதலிய பொருட்கள் வழங்கப்பட்டது.

விழா விற்கான ஏற்பாடுகளை 5-ம் நாள் மண்டகப்படி திருப்பத்தூர் தம்பிபட்டி தென்மாபட்டு சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News