உள்ளூர் செய்திகள்
சுந்தர விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா
- சுந்தர விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் சுந்தரவிநாயகர் உள்ளது. இந்த கோவிலில் 19-ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், சிறப்பு கணபதி ஹோமம், மற்றும் கும்ப கலசங்கள் உள்ள புனித நீரால் சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.
இதை தொடர்ந்து பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தாயமங்கலம் ரோட்டில் உள்ள மயூரநாதர் கோவிலில் பாம்பன்சுவாமி குருபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ெதாடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.