சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆண்டாய்வு செய்தபோது எடுத்த படம்.
எஸ்.புதூர்-சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு
- எஸ்.புதூர்-சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்க ளின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி எஸ்.புதூர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவை சேர்ந்த அலுவலர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவை யிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள்.
இது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணியாளர்க ளின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியி டங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும், தமிழக அரசால் செயல்படுத்தப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளில் முடிவு பெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜ், எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், சத்யன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.