உள்ளூர் செய்திகள்

போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் போடக்கூடாது

Published On 2022-07-06 13:40 IST   |   Update On 2022-07-06 13:40:00 IST
  • போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் போடக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்துகின்றனர்.
  • வருகிற 8-ந் தேதி முதல் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட திண்டுக்கல் ரோடு, காரைக்குடி ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

போக்குவரத்து காவல் அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து வருகிற 8-ந் தேதி முதல் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளில் கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர்கள் நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் கடைகளை அமைத்து வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு வியாபாரம் செய்ய வரும் நபர்களுக்கு வேளாண் வணிகத்துறை சார்பில் தராசு, மின்விளக்கு, பாத்ரூம் வசதி, தொழில் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை செய்து தர காத்திருக்கிறது என்றும், ஆகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் விளை பொருட்களை விற்கக் கூடாது.

அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள உழவர் சந்தையை பயன்படுத்தி வளம் பெற வேண்டும் என பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், செயல் அதிகாரி ஜான் முகமது ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News