உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-11-08 13:02 IST   |   Update On 2022-11-08 13:02:00 IST
  • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
  • இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.

சிவகங்கை

சிகவங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படு த்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News