உள்ளூர் செய்திகள்
பெட்டி காளி கோவில் கும்பாபிஷேகம்
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பழமையான பெட்டி காளி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்டி காளியம்மன் கோவில் வீடு சேதமடைந்தது. இந்த கோவிலின் குடிமக்கள், ேகாவில் வீட்டை புதுப்பித்து கும்பாபிஷேக விழாவை நடத்தினர். கோவில் வீட்டில் பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரிய தேக்கு பெட்டியில் காளி வாசம் செய்வதாக ஐதீகமாகும். கும்பாபிஷேக விழாவிற்காக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பெட்டிக்காளிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.