உள்ளூர் செய்திகள்

திருவிழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி நடந்தது.

முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

Published On 2023-03-22 13:58 IST   |   Update On 2023-03-22 13:58:00 IST
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 29-ந் தேதி தொடங்குகிறது
  • அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே அம்மன் தரிசனம் செய்ய கோவிலில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

விழாவின் முக்கிய உற்சவங்களான பொங்கல் வைபவம் ஏப்ரல் 5-ந் தேதியும், மின்விளக்கு தேர் பவனி 6-ந் தேதியும் 7-ந் தேதி பால்குடம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு புஷ்பபல்லக்கு வீதி உலாவும் நடக்கிறது. 8-ந் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறு கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வசதிக்காக பந்தல் மற்றும் வரிசையில் செல்ல காலரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வறண்டிருந்த தீர்த்த குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டு தற்போது தண்ணீர் நிரப்பி குளம் நிறைந்து காணப்படுகிறது.

திருவிழா நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாயமங்க லத்துக்கு வரும் பக்தர்கள் முத்து மாரியப்பனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி சுமந்தும் நேர்த்தி கடன் நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்வார்கள்.

திருவிழா தொடங்கு வதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பஸ், கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து வேண்டுதல் நிறை வேற்றி முத்துமாரியம்மன் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும் திருவிழா ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

Tags:    

Similar News