உள்ளூர் செய்திகள்

கண்டதேவி கோவிலில் கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

கண்டதேவி கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2022-07-03 11:40 GMT
  • தேவகோட்டை அருகே கண்டதேவி கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 5-ம் நாள் அன்று அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்டது.

இக்கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் ஆனி திருவிழாவில் கண்டதேவி கிராமத்தை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழாவிற்கு இன்று காலை கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. காப்பு கட்டிய 10 நாட்களும் தினந்தோறும் காலை, இரவு சுவாமிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

5-ம் நாள் அன்று அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் 9-ம் திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறும்.

இக்கோவிலில் தேர் பழுதானதால் கடந்த சில ஆண்டுகளாக தேேராட்டம் நடைபெறவில்லை. தற்துபோது புதிய தேர் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு தேர்த் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News