உள்ளூர் செய்திகள்

ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான இலவச பயிற்சி முகாம்

Published On 2022-07-26 13:48 IST   |   Update On 2022-07-26 13:48:00 IST
  • ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான இலவச பயிற்சி முகாம் 5 நாட்கள் நடக்கிறது.
  • பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறு, குறு, நடுத்தர தொழிலில் நிறுவனங்களின் வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் பற்றி 5 நாட்கள் மேலாண்மை மேம்பாட்டு திட்டம் குறித்து சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் நறுமண பூங்கா ( ஸ்பீசிஸ் பார்க்) அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருக்கிறது.

தொழில் முனைவோ ருக்கான சான்றிதழ் (உத்யம்) பெற்றுள்ளவர்கள் மற்றும் ஏற்றுமதி தொழிலில் விருப்பமுடைய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் இலவசமாக பங்கேற்று பயனடையலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய விரும்புப வர்கள் புகைப்படம், தொழில் முனைவோருக்கான சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் எண்:11, கோ.புதூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிக் கொண்டிருக்கும் MSME-DFO மதுரை கிளையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிந்து கொள்ளலாம். முதலில் வரும் 25 பேருக்கே முன்னுரிமை வழங்க ப்படும்.

இந்த 5 நாட்களில் ஏற்றுமதி, இறக்குமதி வழி முறைகள், ஆவண தேவைகள், ஏற்றுமதி மேம்பாட்டிற்காக கிடைக்கும் பல்வேறு அரசு சலுகைகள் பற்றிய தகவல் மற்றும் அதைப் பெறுவதற்கு தேவையான வழிமுறைகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரி களுடன் ஆலோசனை, பேக்கேஜிங் ரூ லேபிளிங் சிக்கல்கள், சர்வதேச தரத்தின் தயாரிப்புக்களை எவ்வாறு உருவாக்குவது? ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான சட்டஉதவிகள் போன்றவை குறித்து விளக்கமாக பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்ப வர்களுக்கு வங்கிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்க ளை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். பயிற்சியில் கலந்து கொள்ப வர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட ஆணை விவரங்களை கைபேசி வாட்ஸ் அப் வழியாக உதவி இயக்குநர் MSME-DFO மதுரை, 98420 35441 எணணிற்கு தொடர்பு கொண்டு நிகழ்விற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News