உள்ளூர் செய்திகள்

இதர கடன்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-06-11 14:28 IST   |   Update On 2022-06-11 14:34:00 IST
  • சிவகங்கை மாவட்டத்தில் இதர கடன்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
  • வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பொது நகைகடன், வட்டியில்லா பயிர்க்கடன், வட்டி இல்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், சுய உதவிகுழு கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது‌.

எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், நில உடமை தொடர்பான 10 (1) கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று பங்குதொகை மற்றும் நுழைவு கட்டணமாக ரூ.110 செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களை பெற்று பயனடையலாம்.

இது தொடர்பான விவரங்களுக்கு சிவகங்கை, திருப்புவனம் வட்டத்திற்கு கள அலுவலர் குறிஞ்சி இளவரசனையும், காளையார்கோவில் வட்டத்திற்கு நவநீதகிருஷ்ண னையும், மானாமதுரை வட்டத்துக்கு மாரியையும், இளையான்குடி வட்டத்திற்கு அழகர்சாமியையும், கல்லல் தேவகோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்கு பொன்னையாவையும், எஸ். புதூர், சிங்கம்புணரி வட்டத்துக்கு வனிதாவையும், சாக்கோட்டை, கண்ணங்குடி வட்டத்திற்கு பூங்கோதையையும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News