உள்ளூர் செய்திகள்

உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்கம்

Published On 2023-05-22 08:50 GMT   |   Update On 2023-05-22 08:50 GMT
  • உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்கப்பட்டுள்ளது.
  • துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் உலர் கழிவு சேகரிப்பு மையத்தை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மானாமதுரை நகராட்சி பொதுமக்கள் தங்கள் பயன்படுத்திய மற்றவருக்கு உபயோகமான துணிகள், செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை உலர் கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாம். மானாமதுரை நகரை குப்பை இல்லாத நக ராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்த பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச் செல்வம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News