உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர கோரிக்கை

Published On 2022-12-29 13:54 IST   |   Update On 2022-12-29 13:54:00 IST
  • அச்சமின்றி பணியாற்ற ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.
  • தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பா ண்டியன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பொருளா தரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதில் அரசுபள்ளிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது.

சமீபகாலமாக ஆசிரியர்கள் சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லை களுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தாக்கிய சம்பவங்களும் சில இடங்களில் அரங்கேறி உள்ளன. உண்மையிலேயே தவறி ழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு நேரடி தொடர்புள்ளதால் பல தேவையற்ற பொய்யான குற்றச்சாட்டிற்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது.

படிப்பில் பின் தங்கிய மாணவர்களை கண்டித்த தற்காக ஆசிரியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதும், சில அரசியல் காரணங்களுக்காகவும் பல்வேறு ஆசிரியர்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சில இடங்களில் விசாரணை யின்றி ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதனால் கற்றல் கற்பித்தலில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலைகளை மாற்று வதற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மதிப்பெண் எடுப்பதை முக்கியமாக கருதாமல் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க வேண்டும். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். விளையாடுவதன் மூலம் வகுப்பறை அழுத்தத்திலிருந்து விடுபட முடிகிறது.

வருங்கால மாணவர் சமுதாயம் அறிவாற்றல் வாய்ந்த வலிமையான சமுதாயமாக மாற்றுவதற்கான ஒத்துழைப்பை ஆசிரியர்கள் தருவதற்கு கடுமையாக உழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக தமிழக மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் பணி பாதுகாப்பு சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News