உள்ளூர் செய்திகள்

ஆறு, கண்மாய், நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிக்கை

Published On 2022-07-04 08:14 GMT   |   Update On 2022-07-04 08:14 GMT
  • ஆறு, கண்மாய், நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிக்கை எழுந்துள்ளது.
  • லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் வீரையா, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் பாண்டி, சிங்கம்புணரி ஒன்றிய அமைப்பாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் ஸ்டாலின், ஸ்தாபன செயலாளர் லீலாவதி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ரங்கையா ஆகியோர் பேசினர். திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் ஆறு, கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் காளைலிங்கம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துசாமி, திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News