சிவகங்கை மாவட்டம் மாதவராயன்பட்டி பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- பாலாற்றின் குறுக்கே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைக்கும் திட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மாதவராயன்பட்டி கிராமம் அருகே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைத்து கோட்டையிருப்பு மற்றும் நாட்டார்மங்கலம் கண்மாய்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் நடைபெறும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கார்த்திகேயன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முக வடிவேல், உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், ஊராட்சி மன்றத்தலைவர்கள் திலகவதி பாண்டியன், சத்தியகலா, சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறும்போது, இந்த திட்டத்தின் மூலம் நாட்டார்மங்கலம், கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, கீழ்நிலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்தப்பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.